கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்ட விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் : ரசிகர்கள் அதிர்ச்சி..!

 
jananayagan

தவெக தலைவர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன்.பொங்கல் அன்று வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவது தாமதம் ஆகி உள்ளது.

இதனிடையே, இந்தப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து படம் வெளியான சமூக வலைதளம் மற்றும் டெலிகிராம் சேனல்கள் உள்ளிட்டவற்றை சைபர் கிரமை் போலீசார் முடக்கி வருகின்றனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சட்டவிரோதமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக ஸ்ரீராம் கேபிள் என்ற உள்ளூர் கேபிள் டிவி சேனல் அலுவலகத்துக்கு சென்ற போலீசார், அங்கிருந்த நான்கு ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர். கேபிள் டிவி ஆபரேட்டர் பழனிசாமி, 44, என்பவர் கைது செய்யப்பட்டார்.