இன்று நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜயின் கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து..!

 
Vijay

த.வெ.க., தலைவர் விஜய் கடந்த 9ம் தேதி, கடலுார் மாவட்டத்தில், மஞ்சக்குப்பம், வடலுார், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி போன்ற இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.. ஆனால், புதுச்சேரி மாநில தேர்தல் அன்று நடந்ததால், அங்கு மத்திய படை போசலீசார், உள்ளூர் போலீசார், முழு பாதுகாப்பில் ஈடுப்பட்டிருந்தனர். எனவே, விஜய் பிரசாரத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்படும். 

மேலும் கடலுார் - புதுச்சேரி எல்லைப் பகுதியில், போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு அச்சறுத்தல், கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதால், அவரது பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், கடலுார் மாவட்டத்தில், உதயநிதி நாளை(அதாவது இன்று ) பிரசாரம் செய்ய போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீஸ் தரப்பில் விஜய் முதலில் அனுமதி கேட்டதால், அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு வேறு தேதியில், அனுமதி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விஜய் பிரசாரத்திற்கு, நாளை அதாவது இன்று  அனுமதி வழங்கப்பட்டாலும், ரோடு ஷோ நடத்தக் கூடாது, ஹெலிகாப்டரில் வரக்கூடாது எனப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கடலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்குடி பிரச்சாரப் பயணங்களில் விஜயின் பிரச்சார வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் பின் தொடர்ந்தனர். இதனால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

எனவே, சென்னையில் இருந்து கடலூர் சுமார் 175 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக விஜய் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அவரின் வாகனத்தை இரு சக்கர வாகனங்களால் பின்தொடர வாய்ப்புள்ளது. அதை தவிர்க்கும் விதமாகவும், பொது போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறு தவிர்க்கும் விதமாகவும் விஜயின் கடலூர் பிரச்சாரப் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது.