விஜய்யின் நெருங்கிய உறவினரான இன்னசென்ட் திவ்யா பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக நியமனம்
விஜய்யின் நெருங்கிய உறவினரான இன்னசென்ட் திவ்யா பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நிறுவனத்தில் பணி ஆற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். சகாயம் ஐஏஎஸ் அதிகாரி இருந்த காலத்தில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் லாபத்தில் இயங்கி வந்தது. இன்னசெண்ட் திவ்யா பதவியேற்ற பிறகு அந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சேலை மட்டுமே விற்க வேண்டும் போர்வை மற்றும் வீட்டுத் துணியை உள்ளிட்ட இதர துணிகளை கொள்முதல் செய்யக்கூடாது என்று கடும் கெடுபடி விதித்தார். மேலும் பெண் ஊழியர்கள் வெளியில் சென்று துணிகளை விற்க வேண்டும் என்ற கெடுபிடிகள் காட்டப்பட்டது. மேலும் 10 விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்ற அறிவிக்கப்பட்டதால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த சூழலில் கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது துறை ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பள்ளி கல்வித்துறையில் என்ன நடக்கப்போகிறது என்பது அந்தத் துறை ஊழியர்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னோசெண்ட் திவ்யா முதல்வர் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதால் இப்பதவியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இவரும் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் இந்த துறையின் செயல்பாடுகள் கவனிக்கதக்க வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

