ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்- பள்ளிக்கு விடுமுறை
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்திற்கு அருகில் உள்ள பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு டிச.18ம் தேதி ஒரு நாள் விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை மறுதினம் மக்கள் சந்திப்பு பரப்புரை நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பணிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்திற்கு அருகில் உள்ள பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு டிச.18ம் தேதி ஒரு நாள் விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்று நடைபெற இருந்த தேர்வுகள் டிச.26ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


