விஜய் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை? - திமுக, பாஜக உறவு குறித்து த.வெ.க. அருண்ராஜ் கேள்வி!
Updated: Feb 7, 2026, 10:32 IST1770440565816
த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-வேலூரில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு, முதல்-அமைச்சர் நிகழ்ச்சி வேலூரில் நடப்பதாக தகவல் சொல்கிறார்கள். அதனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
அடுத்து சேலத்தில் 13-ந் தேதி விஜய் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். அனுமதி கடி தம் கொடுத்து இருக்கிறோம். தற்போது அங்கு அமித்ஷா வர இருப்பதாக சொல்கிறார்கள். தி.மு.க., பா.ஜனதாவுக்கு என்ன உறவு இருக்கிறதோ? தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


