சீமான் மீது விஜயலட்சுமி புகார் - மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த போலீசார் முடிவு

 
tn

நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையரை கடந்த 28ஆம் தேதி நேரில் சந்தித்த நடிகை விஜயலட்சுமி சீமானை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

tn

இந்நிலையில் சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர். நேற்று விஜய் லட்சுமியின் போலீசார் நடத்தியே 8 மணி நேர விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள் , வங்கி பரிவர்த்தனை விபரம் உள்ளிட்டவை உள்ளிட்டவற்றை அவர் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.