விஜயலட்சுமி - சீமான் விவகாரம்; ஊட்டி விரைந்த தனிப்படை போலீசார்

நடிகை விஜயலட்சுமி - சீமான் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையரை கடந்த 28ஆம் தேதி நேரில் சந்தித்த நடிகை விஜயலட்சுமி சீமானை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கும் சீமான், விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. என்னைப் போலவே நடிகை விஜயலட்சுமி 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் சீமான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.