"நான் பாலியல் தொழிலாளியாடா நாயே! நீ நாசமா போவடா.. என் பாவம் உன்ன சும்மா விடாதுடா"- விஜயலட்சுமி

 
ச்

சீமானை வன்மையாக கண்டித்து நடிகை விஜயலட்சுமி கண்ணீருடன் புதிய வீடியோ  ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

சீமான் மீது  நடிகை விஜயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார்!

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நடிகை விஜயலட்சுமி என்னை பாலியல் குற்றவாளி என எப்படி சொல்லலாம்? 15 ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள். அவள் பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரங்களை காட்டவா? அவளுக்குதான் காயப்படும்? அவளுக்குதான் நீதியா? எங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? என்னை பெற்ற தாய், உடன் பிறந்த அக்கா, தங்கை இல்லையா? மனைவி இல்லையா? தினமும் என்னை அவமானப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். என்னை பேச என்ன தகுதி இருக்கு? வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது என்னை பாலியல் குற்றவாளி என எப்படி சொல்லலாம்? விசாரணை முடிவிலேயே தெரியவரும். என்னை பார்த்து நடுங்குறீர்கள்” எனக் கூறினார்.


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை விஜயலட்சுமி, “நான் பாலியல் தொழிலாளியாடா நாயே! டேய்... இவ்வளவு நாள் நீ தப்பித்திருக்கலாம். ஆனால் இனி எப்படி செருப்படி வாங்கப்போற பாரு....பாலியல் தொழிலாளி என்றால் நான் ஏன் இப்போது தவித்துகொண்டிருக்கப்போகிறேன்? நீ நாசமா போவடா.. என் கண்ணீர் உன்ன சும்மா விடாதுடா?” என கண்ணீருடன் கூறியுள்ளார்.