"2 நாட்களுக்கு முன்பு கூட சமாதான தூது விட்டார் சீமான்" - நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியீடு

 
"2 நாட்களுக்கு முன்பு கூட சமாதான தூது விட்டார் சீமான்" - நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியீடு

சீமானுக்கு எதிரான பலாத்கார வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில் சரமாரியான கேள்விகளுடன் நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீமான் மீது  நடிகை விஜயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார்!

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும்,  விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் சூடு பிடித்துள்ளது.


இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், “சீமான் அவர்களே... முதலில் நடிகை விஜயலட்சுமியை யாரென்றே தெரியாது என சொன்னீங்க.. அப்புறம் நடிகை விஜயலட்சுமியை காங்கிரஸ் கட்சியினர் கூட்டிட்டு வந்ததா சொன்னீங்க... அடுத்து உங்கள் மீது நான் வழக்கு தொடுத்த பின்னர் பாஜக அவர்களை இயக்குவதாக கூறினீர்கள். 2023 ஆம் ஆண்டு என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தீங்கல்ல... அப்போது மாதம் ரூ.50,000 கொடுக்கிறேன் என்னை பற்றி எங்கேயும் பேசாதே! என சொன்னீங்க... மாதம் ரூ.50,000 கொடுத்தீங்க! வீடியோஸ் எல்லாம் வாங்குனீங்க! உங்க பொன்னான வாயாலதான என்ன பொண்டாட்டி பொண்டாட்டீனு கூப்பிட்டீங்க.. அந்த வீடியோவையெல்லாம் காவல்துறைக்கிட்ட கொடுத்து, அதை அவங்க நீதிமன்றத்திடம் காட்டினாங்க.. அதை பார்த்த பின்னரே நீதிபதி, “நடிகை விஜயலட்சுமி உங்க முதல் மனைவியா” எனக் கேட்டிருக்கிறார்கள். திமுக ஒன்னும் மாதம் ரூ.50,000 எனக்கு கொடுக்க சொல்லலா... நான் உங்களை நேரில பார்த்து, “என்ன பார்த்தா எப்படி தெரியுதுனு” கேட்கனும்னு காத்திட்டு இருக்கேன். காவல்துறையிடம் சொன்னால் என்னை பார்க்க ஏற்பாடு செய்துவிடுவார்கள். ஏமாற்றாதீர்கள் சீமான் அவர்களே...  என்னுடைய பாவத்தை கட்டிக்காதீங்க! 2 நாளைக்கு முன்னாடி கூட சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆட்களை அனுப்பிவிட்டு, துரோகம் பண்றீங்களா? என்னுடைய பாவம் உங்களை சும்மா விடாது” எனக் கூறியுள்ளார்.