8 பக்கங்களுக்கு விஜயலட்சுமி பரபரப்பு வாக்குமூலம்! சீமான் கைது செய்யப்படுவாரா?

 
விஜயலட்சுமி

சீமான் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தின் நடுவர் பவித்ரா முன்பாக ஆஜராகி மூன்று மணி நேரத்துக்கு மேலாக 8 பக்கங்கள் அளவில் வாக்குமூலம் அளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 28ஆம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் அந்தப் புகாரின் அடிப்படையில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் ராமாபுரம் காவல் நிலையத்தில்  வைத்து அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தார். அந்த விசாரணையில் சீமான் உடன் திருமணம் நடந்ததற்கான புகைப்படம் ஹோட்டலில் தங்கியதற்கான வீடியோ, வங்கி பணவர்த்தனை விவரம் ஆகியவை அளித்திருந்தார்.

இந்நிலையில் விசாரணை முடிந்த பின் இன்று திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நடுவர் பவித்ரா முன்பாக மதியம் 2 மணி அளவில் போலீசார் அவரை ஆஜர் படுத்தினர். சீமான் திருமணம் செய்ததற்கான ஆதாரப் புகைப்படம் அவர் பேசியதற்கான ஆடியோ வங்கி பரிவர்த்தனை போன்ற விவரங்கள் சுமார் 3 நேரமாக 8 பக்கங்கள் கொடுத்து அவர்  வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அவரை மீண்டும் அழைத்துச் சென்றனர். மீண்டும் ஆஜராவதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. வாக்குமூலம் அடிப்படையில் சீமான் கைது செய்யப்படுவாரா என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவரும்.