எனது உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்பாதீர்கள்- விஜயகாந்த்

 
ஆசிரியர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  - விஜயகாந்த்..

என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 தேமுதிக - விஜயகாந்த்

அண்மையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், “கேப்டன் விஜயகாந்தின் உடல் நலம் பின்னடைவு தான். ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார். ஆனால் பழையபடி பேசுவார் எழுந்து வருவார் என்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். உங்களை மாதிரியே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரைக்கும் கேப்டன் நலமாக தான் இருக்கிறார்” என பேட்டியளித்திருந்தார். 

இது பல்வேறு ஊடகங்களில் திரித்துக் கூறப்பட்ட நிலையில் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் 25.08.2023 காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.