கடும் அப்செட்டில் விஜயதரணி..!பாஜகவை நம்பி சென்றும் பயனில்லை..!

 
1

அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு கடும் அப்செட்டில் இருக்கிறாராம். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விஜயதரணி விரும்பியதாக சொல்லப்படுகிறது. அதற்கு காங்கிரஸ் தலைமை ’நோ’ சொல்ல விஜயதரணி கடும் ஆத்திரமடைந்ததாக கூறப்பபடுகிறது.

அதே நேரத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றாராம் விஜயதரணி. மூன்று முறை தொடர்ச்சியாக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரக இருந்த விஜயதரணியை கட்சியில் இருந்து மெல்ல மெல்ல ஓரங்கட்டுவத அவர் உணர்ந்ததால் பாஜகவுக்கு நூல் விட்டதாக கூறப்படுகிறது.

மாற்றுக்கட்சியினர் அதிருப்தி காரணமாக வெளியேறும் போது சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் பாஜக, பின்னர் அவர்களை அட்ரெஸ் இல்லாமல் ஓரங்கட்டும் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இதே நிலை தான் தற்போது விஜயதரணிக்கும் ஏற்படுகிறதா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

காங்கிரஸில் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டி பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு, பாஜக முக்கியத்துவம் கொடுத்ததா? என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சியினர் சமூக ஊடகங்களில் எழுப்புகின்றனர்.

காங்கிரஸில் சட்டமன்ற உறுப்பினராவாது இருந்திருக்கலாம், பாஜக பக்கம் சென்றதால் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்படுவார் என சமூக ஊடகங்களில் காங்கிரஸார் பதிவிடும் கருத்துகளும் ஒரு பக்கம் வைரலாகியுள்ளது.

கன்னியாகுமரி தொகுதிக்கு விஜயதரணியின் பெயரை பாஜக தலைமை டிக் அடிக்கலாம் என சொல்லப்ப்பட்ட நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரையே மீண்டும் டிக் அடித்துள்ளது பாஜக தேசிய தலைமை.

மக்களவை தேர்தலில் தான் சீட் கொடுக்கவில்லை, விளவங்கோடு இடைத்தேர்தலிலாவது விஜயதரணிக்கு சீட் கொடுக்கப்படும் என நம்பி காத்திருந்த நிலையில், நந்தினிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.