பத்திரிக்கையாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- விஜயபாஸ்கர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பத்திரிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குண்டர்கள் தம்மை பின் தொடர்வதாக காவல்துறையினருக்கு செய்தியாளர் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் @news7tamil செய்தியாளர் நேசபிரபு அவர்களை மர்ம நபர்கள் மிகக் கொடூரமாக தாக்கிய செய்தியும்,
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) January 25, 2024
சம்பவத்துக்கு முன்பே பதட்டமான சூழலை காவல்துறையிடம் அவர் தெரிவிக்கும் ஆடியோவும் நெஞ்சை பதற வைக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு… pic.twitter.com/33tRleFaQa
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு அவர்களை மர்ம நபர்கள் மிகக் கொடூரமாக தாக்கிய செய்தியும், சம்பவத்துக்கு முன்பே பதட்டமான சூழலை காவல்துறையிடம் அவர் தெரிவிக்கும் ஆடியோவும் நெஞ்சை பதற வைக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன். கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.