ஈபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி; மீண்டும் அதிமுக ஆட்சி- விஜயபாஸ்கர் அதிரடி

 
vijayabaskar

அதிமுக பல்வேறு சோதனைகளை தாண்டி, பல கஷ்டங்களைக் கடந்து மீண்டும் மெகா கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு தனி பிரிவு:  அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் | minister vijayabaskar -  hindutamil.in

புதுக்கோட்டை 16வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் அதிமுகவின் 51 வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு அதிமுக கட்சி கொடியினை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான  விஜயபாஸ்கர் ஏற்றி வைத்தார். பின்னர் கல்வெட்டை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “அதிமுக பல்வேறு சோதனைகளை தாண்டி, கஷ்டங்களைக் கடந்து  எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி அமையும் பொழுது மக்கள் இன்றைக்கு ஏங்கிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலத்தில் நிறைவேற்றப்படாத திட்டங்கள், எதிர்பார்த்து நடக்காத திட்டங்கள் எதிர்பார்த்து கிடைக்காத திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும். இன்றைக்கு மின்கட்டண உயர்வு மக்களுக்கு ஷாக் அடிக்க கூடியதாக உள்ளது, அதேபோல் குடிநீர் பிரச்சினையால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மீண்டும் மெகா கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்” என பேசினார்.