“வலிகளையும், ரணங்களையும் சுமந்து கொண்டு அதிமுகவில் இருந்து வெளியே வந்தோம்”- விஜயபாஸ்கர்

 
ச்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “பிரமாண்டமான, சிறப்பான இணைப்பு விழா நடைபெற்று உள்ளது. பழைய தலைமையின் மீதான வெறுப்பால், புதிய தலைமையின் மீதான ஈர்ப்பால் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் தவெகவில் இணைந்துள்ளது. இன்னும் பலர் தங்களை தவெகவில் இணைத்து கொள்வார்கள். விரைவில் டெல்டாவில் நடைபெறும் விழாவில் மேலும் பலர் தவெகவில் இணைவர். திமுக ஆட்சியில் நாங்கள் பல வழக்குகளை சந்தித்தோம். வலிகளையும், ரணங்களையும் சுமந்து கொண்டு அதிமுகவி இருந்து வெளியே வந்தோம்.  தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினேன், தேர்தலில் மக்கள் தவெகவுக்கு வாக்களித்துவிட்டனர். தேர்தலுக்கு பின் தவெக ஆட்சியமைக்க ஆதரவளிக்கலாம் என்றேன். கேட்கவில்லை, இயற்கைக்கு முரணாக திமுகவுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியது பிடிக்கவில்லை. ” என்றார்.