ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்க- விஜயபாஸ்கர்

 
ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்க- விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்க- விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தால் தான் ஜல்லிக்கட்டு காலம் முழுவதும் நடக்கும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். அவரின் கொம்பன் காளை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயபாஸ்கர், “பொங்கல் என்றாலே உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்ப்பார்ப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தாமதமின்றி விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும். ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தட வேண்டும்.

ஆன்லைன் டோக்கன் முறை காளை வளர்போரை கழுத்தை நெரிப்பது போல் உள்ளது. எனவே அதனை ரத்து செய்து கை டோக்கனை வழங்கிட வேண்டும். அப்போது தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவார்” என்றார்.