தவெகவில் இணையலாமா? விஜயபாஸ்கர் 2வது நாளாக ஆலோசனை
இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம் எல் ஏ வுமான சி. விஜயபாஸ்கர்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இருந்த நிலையில் சிவி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் தவிர மற்ற அனைவரும் மீண்டும் இபிஎஸ் ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டனர்
இந்த நிலையில் சி.வி சண்முகம் மற்றும் சி விஜயபாஸ்கர் தாங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில் விராலிமலை தொகுதி எம் எல் ஏ சி விஜயபாஸ்கர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு இரண்டாவது முறையாக இலுப்பூர் இல்லத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நிலைப்பாடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்
அவரைப் பொறுத்தவரை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் விருப்பத்துடன் அவர்களின் சொல்லுக்கு ஏற்ப சென்றதாக இருக்க வேண்டும் என்று கோணத்தில் மட்டுமே அவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் தவெகாவில் இணைய ஏற்கனவே அவர் முடிவு செய்துவிட்டதாகவும் ஆசோசனை என்பது வெறும் கண்துடைப்பு தான் என்று கூறப்படுகிறது விரைவில் விஜயபாஸ்கர் தவெகாவில் இணைய உள்ளதாக அவரது தீவிர ஆதரவாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்

