#BREAKING தவெகவில் இணைகிறார் விஜயபாஸ்கர்
Jun 17, 2026, 18:52 IST1781702535089
அதிமுக எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைகிறார்.

தவெகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை மேற்கொண்டால் அந்த முடிவை முழு மனதுடன் வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுக்கோட்டையில் அவரது ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கூட்டாக முடிவு செய்துள்ளனர். 24 ஒன்றிய செயலாளர்கள், 8 நகர செயலாளர்கள், 40 மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விஜய பாஸ்கர் தலைமையில் தவெகவில் இணைவது என முடிவு செய்யப்பட்டுள்ளது

