விராலிமலையில் முதல்வர் விஜய் படம் இல்லாமல் விஜயபாஸ்கரின் தீபாவளி பரிசு
விராலிமலை தொகுதி மக்களுக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வழங்கி வரும் தீபாவளி பரிசு பை தான் இப்போது தொகுதி முழுவதும் ஹாட் டாபிக். காரணம் அந்த பையில் முதல்வர் விஜய் படம் இல்லை.

வழக்கமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடுக்கப்படும் பரிசு பொருட்கள், நலத்திட்ட உதவிகளில் முதல்வர் விஜய் படம் இடம்பெறுவது வழக்கம். ஆனால் விஜயபாஸ்கர் வழங்கி வரும் இந்த தீபாவளி பரிசு பையில் முதல்வர் விஜய் படம் இல்லாமல், விஜயபாஸ்கரின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அந்த நீல நிற பையில் மயில் படத்துடன் விஜயபாஸ்கர் படம் மட்டும் இருக்கிறது. பைக்குள் 2 எவர்சில்வர் டிபன் பாக்ஸ், 1 குலாப் ஜாமுன் டின், 1 விசில் என ரூ.2000 மதிப்புள்ள பொருட்கள் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் அல்ல, விராலிமலை தொகுதி முழுவதும் உள்ள சுமார் 90,000 ரேஷன் குடும்பங்களுக்கு இந்த பரிசு வீடு தேடி சென்று வழங்கப்படுகிறது. முன்னதாக பொங்கலுக்கும், பதவி ராஜினாமாவின் போதும் பரிசு கொடுத்தவர், தற்போது தீபாவளிக்கு 3-வது முறையாக இந்த பரிசை கொடுத்து வருகிறார். முதல்வர் விஜய் படம் இல்லாமல் சொந்த படத்துடன் பரிசு கொடுப்பது தொகுதி மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

