மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்த செய்தி துயரத்தை தருகிறது - விஜயபாஸ்கர் இரங்கல்

 
vijayabaskar

நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நடிகரும் , இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை 8.30  மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  மாரிமுத்து மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மாரிமுத்து மறைவிற்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், திரைப்பட உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர் என தன் திறமையால், நீண்டகால உழைப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த திரைக்கலைஞர் #மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி துயரத்தை தருகிறது. எளிய மக்களின் அன்பை பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல; 
அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அசாத்தியமானது. அந்த உழைப்பின் பயனை,  மகிழ்ச்சியை அடைவதற்குள் மறைவெய்தியது ஆற்றொண்ணா துயரம்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.