ஸ்டாலினுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க மட்டும் நேரம் இருக்கா?- விஜய பிரபாகரன்

 
Vijaya prabhakaran

அதிமுக தலைவர் யார் என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கே தெரியவில்லை என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

எனக்கு திமிரு ஜாஸ்தி...: விஜயகாந்த் மகனின் முதல் அரசியல் மேடை பேச்சு... |  nakkheeran

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், “எனக்கு நேரமே இல்லை என கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க 6 மணிநேரம் செலவழிப்பது ஏன்? தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது முதலமைச்சருக்கே தெரியவில்லை. திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கே நிதி கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறாது என்றே தெரியவில்லை.

அதிமுக தலைவர் யார் என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கே தெரியவில்லை. அதிமுக தலைவர் யார் என தெரியாதபோது அவர்கள் எப்படி எதிர்க்கட்சியாக செயல்பட முடியும்? ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா என அனைவரையும் அதிமுகவினர் சந்திக்கின்றனர். கூட்டணி தொடர்பாக கட்சி தலைமை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும். எல்லா மாவட்டத்திலும், எங்க கட்சியின் கட்டமைப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 2000ரூபாய் நோட்டை செல்லாது என்று மத்திய அரசு சொல்லவில்லை. திரும்ப பெறுவதாக மட்டுமே சொல்லி உள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கவே 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தேமுதிக தொண்டர்களுக்கு பாதிப்பில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடு ஈர்த்துவந்தால் நல்லதுதான். ஆனால் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் எவ்வித மாற்றமும் நடைபெறபோவதில்லை” எனக் கூறினார்.