"விஜய் அண்ணா காங்கிரஸின் தூண்டிலில் சிக்கக்கூடாது”- விஜய பிரபாகரன்

 
s s

2 பெரிய கட்சிக்கும் தேமுதிகவின் தேவையும், சேவையும் வேண்டும் என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கடலூரில் நடைபெற்றுவரும் தேமுதிக மாநாட்டில் உரையாற்றிய இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், “இன்று என் அம்மா கோயிலில் 2 இடங்களில் சூரைத் தேங்காய் உடைத்தார். இரண்டு இடத்திலும் தேங்காய் இரண்டாக பிளந்துவிட்டது. இதில் இருந்து என்ன தெரிகிறது? 2 பெரிய கட்சிக்கும் தேமுதிகவின் தேவையும், சேவையும் வேண்டும் என்பது தெரிகிறது. கூட இருந்த துரோகத்தை பார்த்துட்டோம்.. இனி நம்ப கூட இருக்க விசுவாசத்தை பார்க்கப்போறோம். ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் அண்ணாவுக்கு எனது சிறிய அறிவுரை. காங்கிரஸின் தூண்டிலில் சிக்கக்கூடாது.

கேப்டன் விட்டு சென்ற பணியை இன்று பிரேமலதா செய்கிறார். அவர்களுக்கு ஆதரவாக, அவர்கள் மகனாக மட்டுமின்றி, தேமுதிக தொண்டனாக எனக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறை தலைவர்களின் படங்களைக் காட்டும்போது ஏன் விஜய பிரபாகரனை காட்டுவது இல்லை? ஓபன் சேலஞ்ச்... 2005 ஆம் ஆண்டுக்கு முன் கேப்டனிடம் எவ்வளவு சொத்து இருந்தது? இப்போது கேப்டன் குடும்பத்துக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என பாருங்கள்.” என்றார்.