“விஜய்யின் ரசிகர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை”- விஜய பிரபாகரன்
இன்றைய தேதியில் மக்களுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைத்துள்ளேன் என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், “விஜயகாந்துக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது அதை தான் மேடையில் வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யுடன் கூட்டணியா என்பது ஜன.9ல் தெரியவரும். 2026 தேர்தலில் தேமுதிக இணையும் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இன்றைய தேதியில் மக்களுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. விஜய்யின் ரசிகர்கள் அவ்வளவு முட்டாள் கிடையாது. நாம் தமிழர் சீமான் அன்றைய தினம் கேப்டன் ட்ரெண்டிங்கில் இருந்தபோது கேப்டனை திட்டியதால் ஓட்டு வாங்கினார்.
பல எதிர்ப்புகளை மீறி தேமுதிக கட்சி வளர்ந்துள்ளது. அதற்கு கேப்டன் விஜயகாந்த் தான் காரணம். என் அப்பாவை நான் மிஸ் பண்ணுவது போல தமிழகத்தில் ஒவ்வொருவரும் மிஸ் பண்ணுகிறார்கள். கேப்டன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே அரசிலுக்கு வந்தார். உங்கள் ஆசையை பூர்த்தி செய்ய லேடி கேப்டன் வந்துள்ளார்கள். அது எனது அம்மா. அனைவரும் பிரமலதா விஜயகாந்த் அடுத்த ஜெயலலிதாவா என கேட்கின்றனர். தமிழகம் முழுவதும் இல்லம் தேடி உள்ளம் நாடி பிரச்சாரத்தின் இரண்டாம் கட்ட பயணம் செய்து வருகிறோம்” எனக் கூறினார்.


