"விஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார்"- விஜய பிரபாகரன்

 
விஜய பிரபாகர் பேட்டி விஜய பிரபாகர் பேட்டி

விஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா நடைபெறுகிறது இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி யுமான துரை வைகோ, வி.கே.சசிகலா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர், பாமக சார்பில் ஜி.கே.மணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், "நீண்ட நாள் போராட்டத்திற்கு விஜய் மாநாடு நடத்தியிருக்கிறார். அதற்கு எங்கள் வாழ்த்துக்கள். விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை தினமும் நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மாநாடு நடக்கும்போது நினைவுகளை சுட்டிக் காட்டுவது வழக்கம். விஜயகாந்தை ஒரு எடுத்துக்காட்டாக முன்வைத்துதான் விஜயும் மாநாட்டை நடத்தியுள்ளார். விஜய் அண்ணன் ஒரு கட்சி ஆரம்பித்து அவரது கொள்கையை சொல்லி இருக்கிறார். இன்னும் பல நாட்கள் விஜய் உழைக்க வேண்டும்" எனக் கூறினார்.