கேப்டன் விஜயகாந்த் மகன் முன்னிலை

 
tt

விருதுநகர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் முன்னிலை  வகித்து வருகிறார்.

virudhunagar ttn

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின்  வாக்கு எண்ணிக்கையானது இன்று நடைபெற்று இன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுள்ளார்.அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்ட நிலையில் பாஜக சார்பில்  நடிகை ராதிகா சரத்குமார்,  சிட்டிங் எம்பியான காங்கிரஸ் மாணிக்கம் தாகூரே மீண்டும்  விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் கண்டுள்ளார். 

Vijaya Prabhakaran participate Virudhunagar constituency

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.