“மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது”- பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
Jul 28, 2026, 15:05 IST1785231340668
மத்திய அமைச்சர் ராஜ்பூசன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “காவிரியை அணைக்க தமிழ்நாடு அனுமதி தேவையில்லை என மத்திய அமைச்சர் ராஜ்பூசன் கூறியது சரியல்ல. மத்திய அமைச்சர் கருத்தை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதியின்று மேகதாதுவில் அணை கட்டலாம் என்ற நிலைபாட்டை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி மன்ற இறுதித்தீர்ப்பு, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா அணை கட்ட முடியாது. எனவே பிரதமர் மோடி மேகதாது விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும். மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது. கடைமடை மாநில அனுமதியின்றி மேலே உள்ள மாநிலம் அணை கட்ட முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

