பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

 
விஜய்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு இன்று மார்ச் 3 ஆம் தேதியும், பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 05 ஆம் தேதியும் தொடங்குகிறது. 12ஆம் வகுப்புத் தேர்வினை 8,21,057 மாணவ - மாணவிகளும், 11ஆம் வகுப்புத் தேர்வினை 8,23,261 மாணவ - மாணவிகளும் எழுத உள்ளனர்.

மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்! - Vijay meet Students

இந்நிலையில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகரும் தவெக தலைவருமான விஜய், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டுத் தேர்வினை நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் காத்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் எதிர்காலமும் நிச்சயம் சிறப்பாக அமையும். அதற்கான படிக்கட்டாக இந்தத் தேர்வு அமைந்திருக்கிறது. உங்கள் இத்தனை ஆண்டு கால கனவுக்கும், கடின உழைப்புக்கும் நற்பலன்கள் கொடுப்பதாக இந்தத் தேர்வு அமையட்டும். தனித்திறன் படைத்த நீங்கள் ஒவ்வொருவரும், இந்தத் தேர்வுகளின் மூலம், உயர்கல்வியில் தங்களுக்கு விருப்பமான துறைகளை நோக்கிப் பயணப்படவும், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பல சாதனைகள் படைக்கவும், எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.