அடுத்த மாதம் கல்வி விருது வழங்கும் விஜய்

 
கைகோர்ப்போம் துயர்துடைப்போம்... நடிகர் விஜய் வேண்டுகோள்...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டும் ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய். 

10 மணி நேரத்துக்கும் மேலாக நடிகர் விஜய் நிகழ்வு நீடிப்பு | Vijay Makkal  Iyakkhams Vijay Education Award Ceremony still going on - hindutamil.in

2023-24 கல்வி ஆண்டின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமான விஜய் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

அதில் அண்மையில் நடைபெற்ற 12 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவரும் இனி  உயர் கல்வி இலக்குகளுடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வளம் வர இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் என தெரிவித்து விரைவில் நாம் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

கல்வி விருது வழங்கும் விழா.. நடிகர் விஜய் செலவு செய்தது இத்தனை கோடியா?  நெகிழும் ரசிகர்கள் | Do you know how much amout was spent in Vijay's kalvi  viruthu function? - Tamil Oneindia

அந்த வகையில் கடந்த ஆண்டில் ஜூன் 17ம் தேதி 10 மற்றும் 12 ஆம்  வகுப்புகளில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரை அழைத்து கல்வி விருது விழா நடித்தினார் அதில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி அனைவரையும்  பாராட்டினார் விஜய். அதேபோல இந்த ஆண்டில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியரை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். எப்போது நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை நடிகராக மட்டும் கல்வி விருது விழாவை நடித்திய விஜய் இந்த ஆண்டு அரசியல் தலைவராக கல்வி விருது விழாவை நடத்துகிறார்.