இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய்..?
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மை பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவை தவெக நாடி வந்தது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விசிகவின் ஆதரவின் மூலம் தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தவெக தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக -107
காங்கிரஸ் -5
சிபிஐ- 2
சிபிஎம் -2
விசிக -2
என மொத்தம் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை விஜய் சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

