இன்று மாவட்ட பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்திக்கும் விஜய்

இன்று மாவட்ட பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்திக்கும் விஜய், எஞ்சிய சில மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். 2026ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே தனது இலக்கு அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் தனது கட்சியில் பல்வேறு கட்டமைப்புகளை அமைத்து, கட்சியை வலுப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் அடுத்தகட்ட திட்டம் தொடர்பாக கட்சி தலைமை மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் தனது நிர்வாக வசதிக்காக, 120 கட்சி மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இதுவரையில் 96 கட்சி மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 24 கட்சி மாவட்டங்களுக்கான புதிய பொறுப்பாளர்களை அறிவிக்க இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், புதிதாக நியமிக்கப்படும் மாவட்ட பொறுப்பாளர்களுடன், தனித்தனியே இன்று விஜய் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்