விஜய்தான் அடுத்த முதல்வர்; ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு..!
பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல், ஒன்இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியில் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து அதிரடியான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலக் கணிப்புகளை நினைவுகூர்ந்த அவர், 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், எடப்பாடி பழனிசாமி ஜெயிக்க மாட்டார் என்றும் தான் முன்கூட்டியே வீடியோ வெளியிட்டதாக குறிப்பிட்டார். அதேபோல், 2016-ல் ஜெயலலிதா குறித்துத் தான் சொன்ன கணிப்புகளும் பலித்ததாகத் தெரிவித்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த முறை முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
விஜய்யின் ஜாதகப்படி நான் சொல்கிறேன், இந்தத் தேர்தல் ஆட்டத்தில் அவர் நிச்சயமாக வென்று விடுவார். விஜய்தான் அடுத்த முதல்வர், அவரே ஆளும் கட்சியாக வருவார். இது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல, ஜோதிடக் கணிதத்தின்படி நான் சொல்கிறேன். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மாமன்னர்கள் ஜோதிடத்தை பின்பற்றியே செயல்பட்டனர். அந்த வரிசையில் எனது கணிப்பின்படி விஜய் வெற்றி பெறுவது உறுதி.
விஜய்க்கு இருக்கும் ஆதரவு குறித்து பேசிய அவர், தலைவர் விஜய்க்கான ஆதரவு சுனாமி போல உள்ளது. சுனாமி வருவதைக் கூடக் கணித்து விடலாம், ஆனால் விஜய்க்கு இருக்கும் ஆதரவின் அளவைக் கணிக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு சுனாமி போலத் திரண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும்போது இது அனைவருக்கும் புரியும் என்றார்.


