விஜய் Vs பொன்ராஜ்: "அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. ஆனால்!" - நிபந்தனையுடன் இறங்கி வந்த அரசியல் விமர்சகர்.

 
1

த.வெ.க பெண் தொண்டர்களுமான சிலர் வெளிப்படுத்திய கருத்தை, மோசமாக சித்தரித்துப் பேசிய அரசியல் விமர்சகரும், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உதவியாளருமான பொன்ராஜ் வெள்ளைச்சாமி, அவர்களை விபச்சாரிகள் என கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி பெரும் சர்ச்சை கிளப்பியது.


த.வெ.க நிர்வாகிகள் பலரும் பொன்ராஜுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், த.வெ.க தலைவர் விஜயும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை இரவு சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்திற்கு நேரில் சென்ற விஜய் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார். இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். 


இந்நிலையில், த.வெ.க பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்புக் கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், "நடிகர் விஜய் அவர்களே! ஆதாய‌ சூதாடி‌ நீங்களா? நானா? உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து: 

1) அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை அதை ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் ஆதாய அரசியல் சூதாடியா, நானா? 

2) எனக்கு என்‌புருஷனை விட விஜய்தான் பிடிக்கும் என்ற பெண்மணியை கண்டித்து திருத்தாமல், ரசித்து கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய‌ சூதாடியா, நானா? 

3) குப்பை கூட்டிடுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கான்னு ஒரு மாணவி பேசி பின்னர் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாரே - அதை கூட ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய‌சூதாடியா, நானா? 

4) உங்களை அரசியல் ரீதியாக நான்‌ செய்யும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், எதற்கெடுத்தாலும் திமுக பின்னால் இறுக்கிறது என்று திமுக போபியா பிடித்து, எதைச் சொன்னால் எதைச் சொன்னால் பித்தம் தெளியும் என்று அலையும் நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?

5) இன்று காலையில் இருந்து இப்போதுவரை நூற்றூக்கணக்கான மிரட்டல் கால்கள், சமூக வளைத்தளத்தில், வாட்ஸ்ஆப்பில் என்னையும், என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்கு தான் வெர்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா?  என்ன ஒரு‌ இழி நிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள். 

அரசியலில் நான்‌ கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை‌ என்றால் இப்படியா வசை பாடுவது.‌ நான்‌ பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல. எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. 

ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சில நாதாரிகள் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக இருந்தாலும், I will call spade as spade. எனவே, எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மண்ணிப்பு‌கேளுங்கள்.‌ உங்கள் கட்சி பெண்களுக்கு உங்கள் கட்சி ஆட்களால் இளைக்கப்படும்

பாலியல் பலாத்காத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.‌ உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாம் கேட்ட உங்க கட்சி கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டு சென்றதிற்கு மன்னிப்பு கேளுங்கள்.‌ இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.‌ மீண்டும் சொல்கிறேன்,  நான்‌ எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன்.‌  எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.‌" என்று வெ.‌பொன்ராஜ் பதிவிட்டுள்ளார்.