கல்வி விருது விழாவிற்கு வருகை தந்தார் விஜய்

 
tt

தமிழக வெற்றிக்  கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா, இன்று  மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில்  இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.  

ff

முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று   நடைபெறுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட  மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி கல்வி விருதுகள் விழா நடைபெறுகிறது.
 இந்நிலையில் த.வெ.க சார்பில் நடைபெறும் கல்வி விருது விழாவிற்கு வருகை தந்தார் விஜய். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வணக்கம் தெரிவித்த படி வந்த விஜய் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை  சேர்ந்த மாணவன் சின்னதுரை அருகே அமர்ந்தார்.