கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று நலம் விசாரித்தார் விஜய்

 
விஜய்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய்.

Image


கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம்  குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. ஷேஷேசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 24 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளன்ர. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர் என இதுவரையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

Image

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்த விஜய், அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.