நீதி வெல்லும்!- விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு

 
vijay vijay

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நீதி வெல்லும் என நடிகரும் தவெக தலைவருமான விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்! உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் - விஜய்


 கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி  மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இந்நிலையில், ’நீதி வெல்லும்’ என நடிகரும் தவெக தலைவருமான விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.