“மிகுந்த மன வேதனை அடைந்தேன்”- விஜய் ட்வீட்
தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியா சென்று, அங்கு மெக்காவில் இருந்து மதினாவுக்கு புனிதப் பயணம் சென்று கொண்டிருந்த போது சவுதியில் நடந்த சாலை விபத்தில் பேருந்தும், டீசல் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 17, 2025
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா…
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், “தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

