தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

 
 தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

மதுரை தவெக மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விஜய்

அதன்படி,

> பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை கண்டித்து தீர்மானம்

> 2026 சட்டமன்ற தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம்

> தமிழக மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம்

> ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

> குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

> காலிப்பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பாமல் TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பக்கோரி தீர்மானம்