ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு விசேஷத்தில் விஜய் & த்ரிஷா!

 
1

சென்னையில் நடைபெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவிற்கு நடிகை த்ரிஷாவும் விஜய்யுடன் இணைந்து வருகை தந்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. அப்போது முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் நலம் விசாரித்து உரையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னணி நடிகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா மற்றும் முதல்வரின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், இந்த நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.