அம்பேத்கரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!

 
vijay

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
 
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இதேபோல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.