புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராக போராடும் மீனவர்கள்... தானே களத்தில் இறங்க விஜய் திட்டம்
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் 15 மாடிகள் கொண்ட புதிய தலைமைச் செயலகம் கட்டுமான பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்காக முதற்கட்ட அறிக்கையை தயார் செய்து அரசின் ஒப்புதல்பெறப்பட்டடு அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை துவங்கி உள்ளது.
அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் 15 மாடி கொண்ட கட்டுமான பணி தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்தும், ஆர்க்கிடெக்ட் மூலம் வரைபடம் தயார் செய்தும் மூன்று மாதங்களுக்குள் ஒப்படைக்க பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது முதன்மை தலைமை பொறியாளர் செந்தில் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் விரிவான அறிக்கை தயார் செய்யும் பணியில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தலைமைச் செயலக கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் மீனவ மக்களின் வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமைச் செயலகம் அமைக்க விஜய் உத்தரவிட்டார். ஆனாலும் போராட்டம் தொடரும் பட்சத்தில் மீனவ மக்களை நேரில் அழைத்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மூலம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். மீனவ குடும்பத்தைச் சேர்ந்த நானே மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக இருப்பேனா என்கிற அடிப்படையில் அவர்களை சமாதானப்படுத்திய பிறகு இப்பகுதியில் கட்டுமான பணிகளை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். பிரச்சனை தொடர்ந்தால் விஜயே நேரடியாக மக்களை சந்தித்து இது தொடர்பாக விளக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

