டிச.1-ல் விஜய் திருச்சி பயணம்

 
vijay

கொளத்தூர் எம்எல்ஏ-வான வி.எஸ்.பாபு மறைவை அடுத்து, முதல்வர் விஜய்யின் இன்றைய திருச்சி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 1-ம் தேதி முதல்வர் திருச்சி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முதல்வர் விஜய், இன்று திருச்சி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அங்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 134 கோடி ரூபாயில் கட்டப்பட்ட விரிவான மருத்துவ சிகிச்சை கட்டடத்தை திறந்து வைக்க இருந்தார். மேலும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார்.  விஜய் திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்பட்டு வரும் அரசு ஓட்டலுக்கு சென்று, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார். மேலும், திருச்சி மாவட்டத்தில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் திட்டமிட்டிருந்தார்.திருச்சி விமான நிலையத்தில் இருந்து புத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும்போதும், அரசு மருத்துவமனையில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடமான தமிழ்நாடு ஓட்டலுக்கு செல்லும்போதும் முதலமைச்சர் விஜய் சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு பிரமாண்ட ரோடுஷோ நடத்த திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.