பசும்பொன்னுக்கு செல்லும் விஜய்! தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டம்!!

 
தேவர் vijay மரியாதை

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு பல்வேறு காரணங்களால் செல்ல முடியாமல் போன முதல்வர் விஜய், விரைவில் பசும்பொன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜய் பசும்பொன் போக ஆர்வமாக தான் இருந்தார். தென்மாவட்ட அமைச்சர்கள் CTR நிர்மல் குமார், TK பிரபு கூட ஏற்பாடுகளை செய்திருந்தனர். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் செல்லவும் பிளான் ரெடியாக இருந்தது. ஆனால் ஜெயந்திக்கு ஒரு வாரம் முன்பு உளவுத்துறையில் இருந்து ஒரு ரிப்போர்ட் வந்துள்ளது. அதில், "சும்மாவே பசும்பொன்னில் கூட்டம் அலைமோதும், இதில் விஜய் வந்தால் மக்கள் முண்டியடித்து பார்க்கும் ஆர்வத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது, பெரும் பாதிப்பு ஏற்படலாம்" என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. 
இதனால் தான் விஜய் தனது பசும்பொன் பயணத்தை தவிர்த்தார். அதற்கு பதிலாக சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஜெயந்திக்கு போகாததால் மக்கள் கோவத்தில் இருக்கிறார்கள் என்பது முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் தேவர் ஜெயந்திக்கு வராத மற்ற தலைவர்கள் போல தன்னையும் மக்கள் நினைத்து விடக்கூடாது என விஜய் நினைக்கிறார். தான் மற்ற அரசியல் தலைவர்கள் போல அல்ல, தேவர் மீது உண்மையான பற்று கொண்டவர் என்பதை காட்டவே, கூட்டம் இல்லாத ஒரு நாளை பார்த்து விரைவில் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளார். ஏனென்றால் அங்கு போகவில்லை என்றால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் மக்களின் கோபம் இன்னும் அதிகமாகும் என்பதை உணர்ந்து, பசும்பொன் செல்லும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும், முதல்வரின் வருகையை ஒட்டி தென்மாவட்ட தவெக நிர்வாகிகள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது