திராவிட சாயலில் பயணிக்கும் விஜய்? - தமிழிசை கருத்து..

 
tamilisai


நடிகர் விஜய் திராவிட சாயலில் பயணிப்பது போல் தெரிகிறது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதை போல் தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சி தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில் வர வேண்டும். விஜய் மாற்றி பயணிப்பார் என நினைத்தேன். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்.  விஜய்யின் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறு  ஒரு சாயத்தை பூசப்போகிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும். 

vijay

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம். தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்? சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய்விட்டார்.  

விசிக மது ஒழிப்பு மாநாடு எந்த தாக்கத்தையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப் போவதில்லை; அப்பட்டமான நாடகமாக மாற்ற்இ இருக்கிறார்கள். திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு  எப்படி மதுவிலக்கை பற்றி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்?” என்று தெரிவித்தார்.