தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கான 2ஆவது பட்டியலை நாளை வெளியிடுகிறார் விஜய்

தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கான 2ஆவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (ஜன.29) வெளியிடுகிறார்.
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களுக்கான 2ஆவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (ஜன.29) வெளியிடுகிறார். இதற்காக சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் நாளை 2வது கட்டமாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்கால் நடத்துகிறார். நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக தவெக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே தலா 5 முதல் 7 பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு நிர்வாகியை நியமிக்கவும் ஆணையிட்டுள்ளார்.