நாளை தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா- விஜய் பங்கேற்பு
Dec 21, 2025, 09:40 IST1766290227000
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.

தவெக சார்பில் நாளை கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுகிறார் . தனியார் நட்சத்திர விடுதியில் உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 1000 பேருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு முக்கிய நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் மட்டும் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட உள்ளது .


