ஆகஸ்ட் 15ல் கொடியேற்றும் விஜய்- RED ZONEஆக அறிவிப்பு
Aug 11, 2026, 19:45 IST1786457759863
முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றவுள்ள நிலையில், வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தின விழா பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 14, 15-ல் சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன், மைக்ரோ லைட் ஏர்கிராஃப்ட், பாரா கிளைடர், பாரா மோட்டார், ஹேங் கிளைடர், ஹாட் ஏர் பலூன் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை முதல்வர் பயணிக்கும் பாதை ஆகியவை RED ZONE ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. RED ZONE பகுதியில் வரும் 14, 15 ஆகிய இரு நாட்களிலும் டிரோன்கள் பறக்க விட தடை விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

