கட்சியில் முக்கிய பொறுப்பை செங்கோட்டையன் வசம் ஒப்படைக்கும் விஜய்
தவெகவின் மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் மூத்த தலைவரும், 50 ஆண்டு கால அதிமுக உறுப்பினருமான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் தவெகவின் மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டையனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜயின் பிரச்சாரம் தொடர்பான திட்டமிடலை செங்கோட்டையன் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.


