அதிர்ச்சியில் விஜய் : இதை மட்டும் தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை துறப்போம்- காங்கிரஸ் எச்சரிக்கை..!
Aug 31, 2026, 05:45 IST1788135352000
கன்னியாகுமரியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பேசுகையில்,
"வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்களும் பதவியில் நீடிக்க மாட்டார்கள். எங்களுக்கு கட்சிதான் பெரிது. இந்த இயக்கம் எங்களுக்கு பெரியது. இந்த இயக்கம் என்ன சொல்கிறதோ அதை செய்வேன். இந்தப் பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் தலைமை கூறினால், அடுத்த நிமிடமே அமைச்சர் பதவியில் இருந்து விலகுவோம்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடைசி தொண்டனின் எதிர்பார்ப்பு ராகுல் காந்திதான்" என்று பேசினார். அவருடைய பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

