செங்கோட்டையன் பதவி ஏற்பதை எழுந்து நின்று கைத்தட்டி ரசித்த விஜய்
May 10, 2026, 10:37 IST1778389678474
செங்கோட்டையன் பதவி ஏற்பின் போது நின்று கொண்டே கண்டு களித்த விஜய் மற்றும் ராகுல் காந்தி.

அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் உறுதிமொழி @KASengottaiyan ❤️🔥 pic.twitter.com/7hczItMPdE
— priya (@PriyankaSmile01) May 10, 2026
ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமாருக்கு பின்னர் அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றார். அவர் பதவி ஏற்கும் வரை விஜய் எழுந்து நின்று உற்சாகமாக கைத்தட்டினார். புதிதாக ஆரம்பித்த கட்சியான தவெகவில் இணைந்து, தனது அரசியல் அனுபவத்தை சரியாக பயன்படுத்தி அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார் செங்கோட்டையன்.
விஜயுடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஜி.அருண்ராஜ்,கே.ஏ.செங்கோட்டையன், பி.வெங்கடரமணன்,ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, செல்வி எஸ்.கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

