விஜயின் ஜனநாயகன் படம் இணையதளத்தில் கசிவு: முக்கிய குற்றவாளி கைது..!

 
jananayagan

முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளியாவதில் இழுபறி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியானது.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் , இந்த படம் இணையதளத்தில் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட நபரை தேடி வந்தனர்.

தொழில்நுட்ப தகவல் மற்றும் உளவுத்துறை தகவல் அடிப்படையில் அவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் படம் வெளியானது தொடர்பாக மற்றொரு குற்றவாளியையும் கைது செய்துள்ளனர். இதனால், கைது எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.